'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியின்போது ரசிகை ஒருவர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில் இன்று (டிச.13) காலை நடிகர் அல்லு அர்ஜுன் போலீசாரை கைது செய்யப்பட்ட மாலையில் ஜாமினில் வெளியேவந்தார். இந்நிலையில் "இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடிவில்லை. 'புஷ்பா-2' முதல் காட்சியின்போது ஒருவர் இறந்தது துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமான ஒன்றும் கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது" என்று நடிகை ரஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார்.