திருச்சி மாநகராட்சியில் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 17.9.2024 அன்று விடுமுறை தினம் என்பதால் இன்று 16.9.2014 மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர். சரவணன் துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் பாலு, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.