மணப்பாறை அருகே ஆடி முதல் நாளில் பால்குடத் திருவிழா

83பார்த்தது
மணப்பாறை அருகே ஆடி முதல் நாளில் பால்குடத் திருவிழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த‌ மான்பூண்டி ஆற்றங்கரையில் நூற்றாண்டுகள் பழைமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆடி முதல் நாளான இன்று பால்குட விழா நடைபெற்றது. காப்பு காட்டி விரதமிருந்த பக்தர்கள் இன்று காலை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பால்குடம் சுமந்து தாரை தப்பட்டை முழங்க குதிரை நடனத்துடன் பால்குடம் மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலை வந்து அடைந்த பின் மான்பூண்டி நல்லாண்டாவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த பால்குட விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி