மணப்பாறை அருகே தீராம்பட்டி அந்தோணியார் கோயில் விழாவை பொங்கல் முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந் தது. போட்டியை ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். வாடிவாசலில் முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல் புதுக்கோட்டை, சிவ கங்கை, மதுரை, கரூர் உட்பட பல்வேறு மாவட் டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 753 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்க 315 மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களம் இறங்கினர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்க மறுத்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், வெள்ளி நாணயம், குத்து விளக் விளக்கு உட்பட பல்வேறு பரிசுப் பொருட் கள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என்று 31 பேர் காயமடைந்தனர்.