துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடம்மாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது (25) கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டு அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்தும் தலைவலி குணமாகாததால் நேற்று முன்தினம் (மார்ச்.26) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.