500 பேருக்கு இலவச கல்வி - ஐ.ஜே.க பாரிவேந்தர் அறிவிப்பு

5151பார்த்தது
வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இதையொட்டி அக்கட்சியின் சார்பில் மண்ணச்சநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் பாரிவேந்தர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதில் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றேன். நான் பிறந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் என்றாலும், எனது குலதெய்வம் இந்த ஊரில் தான் உள்ளது. நான் அடிப்படையில் ஒரு கல்வியாளர் ஆவேன். நான் வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், மீண்டும் ஆயிரத்து 500 பேருக்கு தரமான இலவச கல்வி வழங்குவேன்.

தமிழ்நாடு ஊழல், லட்சத்தில் திழைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளாக பல்வேறு இலவசங்களை வழங்கி வருகிறார். இது தொடர்ந்தால், தமிழகம் திவாலாகிவிடும் என்று பேசினார். கூட்டத்தில் பாஜக புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், அமமுக மாவட்ட செயலாளர் ராஜசேகர், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி