மீன்பிடித் திருவிழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்!

68பார்த்தது
மீன்பிடித் திருவிழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்!
கடலூரில் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விநாயக நந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றியதால் இன்று மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் பாசார், மங்களூர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டி போட்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர். சிலர் மீன்களை விற்பனையும் செய்தனர்.

தொடர்புடைய செய்தி