முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் கள்ள உறவு

70பார்த்தது
முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் கள்ள உறவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கள்ள உறவு இருப்பதாக ஸ்டாலின் விமர்சிக்கிறார். நாங்கள் கள்ள உறவு வைக்கவில்லை, முதலமைச்சர் ஸ்டாலின்தான் பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையான விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி