நிதிநிறுவனத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
நிதிநிறுவனத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மண்ணச்சநல்லூரில் மகளிர் குழுவில் தவணை பணம் கட்டாததால் பெண்ணை தற்கொலைக்கு தூண்டச் செய்த நிதி நிறுவன ஊழியரை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தீராம்பாளையத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி இவர் எதுமலை சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி இருந்தார் கடனுக்கான ஒரு மாத தவணையை கட்டவில்லை என கூறப்படுகிறது இதனால் அவரது வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர் சுரேந்தர் என்பவர் விசாலாட்சியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி அவரை வீட்டில் வைத்து பூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த விசாலாட்சி கடந்த ஒன்றாம் தேதி அன்று அரளி விதை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இது பற்றி அவர்கள் கூறியதில் இந்த நிதி நிறுவனத்தின் அராஜகம் இப்பகுதியில் அதிகமாகி வருகிறது எனவும் இது இவர்களின் வரி வசூல் தொல்லை சம்பவத்தால் ஏற்படும் மூன்றாவது தற்கொலை சம்பவம் எனவும் உடனே நிதி நிறுவன ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி