மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவங்கி வைத்த எம். எல். ஏ

85பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவங்கி வைத்த எம். எல். ஏ
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான‌ மக்களுடன் முதல்வர் திட்ட இன்று முகாம் நடைபெற்றது. இதில் சித்தாநத்தம், சமுத்திரம், மொண்டிப்பட்டி, கே. பெரியபட்டி ஆகிய நான்கு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது‌. இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ‌ பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ மனுக்களை தீர்வு காண்பதற்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இந்த முகாமில் காவல்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு, மின்வாரியம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள்‌ பங்கேற்று தங்கள் துறை சார்ந்த பொதுமக்களின் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை ‌எடுத்தனர். இதில் மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஊராட்சி தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வம், ரேகாகன்னியசீலன், கலைச்செல்விநாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரவணன், வட்டாட்சியர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், முகமதுபரூக், குப்பனார்பட்டி சின்னையா, பூங்குடிபட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி