திருவானைக்காவல் கோயிலில் ஆடிப்பூர தெப்ப விழா கொடியேற்றம்

82பார்த்தது
திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. ஆகஸ்ட் 9ல் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

இன்று தொடங்கி 12 நாள்கள் நடைபெறும் விழா அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4ம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 2ம் நாளான 30ம் தேதி கிளி வாகனத்திலும், 3ம் நாளான 31ம் தேதி காமதேனு வாகனத்திலும், 4ம் நாளான ஆக. 1ம் தேதி சந் திரபிரபை வாகனத்திலும், 5ம் நாளான 2ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6ம் நாளான 3ம் தேதி பல்லக்கு, கோடி நெய்வேத்யமும், 7ம் நாளான 4ம் தேதி (ஆடி அமாவாசை) பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும், 8ம் நாளான 5ம் தேதி சிம்ம வாகனத்திலும், 9ம் நாளான 6ம் தேதி காலை கோர தத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், 10ம் நாளான 7ம் தேதி (ஆடிப்பூரம் ) மாலை, அம்மன் சன்னதியில் ஏற்றி இறக்குதல், அம்மன் மடிசார் சேவையும், 11ம் நாளான 8ம் தேதி வெள்ளி மஞ்சத்தி லும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12ம் நாளான 9 ம் தேதி மாலை சூரிய தீர்த்தக் குளத்தில் நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி