முசிறி அருகே சூதாட்டம் 3 பேர் கைது

53பார்த்தது
முசிறி அருகே சூதாட்டம் 3 பேர் கைது
முசிறி காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட தண்டலைபுத்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் முசிறி போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தண்டலைபுத்தூரை சேர்ந்த துரைராஜ், சுப்பிரமணியம், முருகானந்தம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2010 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி