நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று (டிச. 12) கொண்டாடப்படுகிறது. பெங்களூரூவில் பேருந்து நடத்துனராக இருந்த அவர் நடிப்பு தாகத்துடன் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புக்காக முயன்ற போது 1975-ல் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அவரை வில்லனாக கே. பாலச்சந்தர் அறிமுகம் செய்தார். அங்கு தொடங்கிய அவரின் திரைப்பயணம் தொடர்ந்து உயரே பறந்து இன்று நாட்டின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.