ஹமாஸுடனான மோதல்களுக்கு மத்தியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர். காசா மீது நேற்று ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 33 பேர் பலியானதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுடன் போர் நிறுத்தம் செய்துகொண்டாலும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீர்க்கப்படாமல் உள்ளது. அதே போல், நுசிராத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.