கிராமத்து கதைக்களத்தில் மண்வாசனை மிகுந்த திரைக்காவியங்களை படைத்து வரும் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்தவதாக அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'மனைவி தர்ஷனாவுடனான 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்க விரும்புகிறோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்' என கூறியுள்ளார்.