திருச்சி அரியமங்கலம் அண்ணா நகர் அம்பிகாபரத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது இவர் உடையான்பட்டி ரயில்வே கேட்டருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கே சாத்தனூரைச் சேர்ந்த ரவுடி கோபிநாத் பணம் கேட்டுள்ளார். சாகுல் ஹமீது பணம் கொடுக்க மறுத்தார். இதை அடுத்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1250 ரூபாயை பறித்துச் சென்றார். இது குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிந்து கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோபிநாத் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி சங்கிலியாண்டபுரம் டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் பாலக்கரை சிவள்ளுவர் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் இவர் பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ரவுடி குணசேகர் என்கிற கஞ்சா குணா அவரிடம் 2000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் உடனே கஞ்சா குணா அவரது சட்டை பையில் வைத்திருந்த 1500 ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்றார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.