திருச்சியில் பழங்குடியின மாணவி தற்கொலை

59பார்த்தது
திருச்சியில் பழங்குடியின மாணவி தற்கொலை
திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி விடுதியில் பழங்குடியின மாணவி தற்கொலை செய்து கொண்டார். நிறம் குறித்து சக மாணவிகள் கிண்டல் செய்ததால் அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி