புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் காடே (37), ஷிரூரில் உள்ள ஒரு பண்ணையில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முதல், புனே காவல்துறையின் 13 குழுக்கள் அவரைத் தேடி வந்தன. இரவில், அவர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றார், அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கவே, அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.