புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் பிப்., 24ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பூத் கமிட்டி, அதிமுக வளர்ச்சிப் பணிகள், சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.