பஞ்சாப்: பரித்கோட் மாவட்டத்தில் தனியார் பேருந்து வடிகாலில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்து பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.