விஜய் பிறந்தநாள்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

72பார்த்தது
தூத்துக்குடியில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி