கோடைகால விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம் சமூக ஆர்வலர் கண்டனம்

72பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு அரங்கங்களில் கோடை காலத்தை முன்னிட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கோடைகால பயிற்சி முகாம் இன்று மாலை துவங்குகிறது. இதில் கூடைப்பந்து கைப்பந்து ஹாக்கி கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சியாளரின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது பெரும்பாலும் இந்த கோடைகால பயிற்சி முகாமில் ஏழை எளிய மாணவ மாணவிகளே அதிகளவு பங்கு பெறுவர்.

இந்நிலையில் ஏழை எளிய மாணவர்களின் விளையாட்டு கனவை சிதைக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்த கோடைகால பயிற்சிக்கு தூத்துக்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் 200 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணத்துடன் வசூழிக்கப்படுகிறது மேலும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் 500 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணத்துடன் வசூல் செய்யப்படுகிறது இதன் காரணமாக மாவட்ட விளையாட்டு அரங்கை பயிற்சிக்காக நாடிவரும் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என எண்ணத்துடன் வரும் மாணவர்கள் தங்களால் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி