ஐபிஎல் 2024-ல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், மும்பை அணி ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையை மீறியது. இதன் காரணமாக, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.30 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார். இதனால், தற்காலிக கேப்டனாக யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.