உலகின் முதல் ஒருங்கிணைந்த ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. புல்லட் கர்டைன் என்றும் அழைக்கப்படும் இந்த அமைப்பானது ராக்கெட்டுகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இது சீனா அரசின் பாதுகாப்பு நிறுவனமான நோரின்கோவால் தயாரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு அமைப்பு plane-to-point என்ற முறையில் இலக்கை துல்லியமாக வீழ்த்தும் வல்லமை கொண்டது.