தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் சித்திக். சர்வே மற்றும் ரெக்கார்ட்ஸ் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறி, சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். இதனால், கடுப்பான சித்திக், காரை விட்டு இறங்கி சென்று சுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.