நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் அதிகளவிலான எடை தூக்கி இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற பட்டத்தை பெற்றவர். இவர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தண்டால் செய்து, அதை ரீல்ஸ் ஆக வீடியோ எடுத்து வெளியிட்டார். இதை தொடர்ந்து கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அவருடன் தண்டால் எடுத்த மற்றொரு நபர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.