மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

68பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திதூத்துக்குடியில் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடந்தது.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படதையடுத்து ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுவை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you