துறைமுகத்தில் பல கோடி ஊழல்; கதிர்வேல் குற்றச்சாட்டு

67பார்த்தது
ஐஎன்டியூசி அகில இந்திய துணைத் தலைவர் பி. கதிர்வேல் தூத்துக்குடியில் உள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது

தூத்துக்குடி துறைமுகத்தில் பல ஆண்டுகளுக்கு 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த இடத்தில் தற்போது 200 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் ஒரே கிரேடில் பணியாற்றினர். ஆனால், தற்போது அதே தொழிலாளர்களுக்கு 4 விதமான கிரேடு முறை கொண்டு வரப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல முறை துறைமுக ஆணைய தலைவரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இந்த விவகாரத்தில் கடந்த 2013இல் இருந்து 2023 வரை ஊழியர்களுக்கு முறையாக ஊதிய உயர்வு அளிக்கப்படாமல், ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. போன்று பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மூலம் முறையிட்டபோது, இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தியதில், ஊதியம் சரியாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இது குறித்த விசாரணை தூத்துக்குடி வட்டார தொழிலாளர் ஆணையம் மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் உரிய முடிவு எட்டப்படாவிட்டால், சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.

தொடர்புடைய செய்தி