நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்!

85பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெள்ளத்தால் சேதமடைந்த நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தங்கரை கிராமப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமாகிவிட்டது. ஆகையினால் நெற்பயிர்க்கு இன்சூரன்ஸ் செலுத்திய பணம் இன்னும் வரவில்லை. ஆகையினால் நெற்பயிர்க்கு உடனடியாக இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெரிய சிறிய கன்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள் இனி விவசாயம் செய்ய கையில் பணம் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது ஆகையினால் மாவட்ட நிர்வாகம் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி