டாஸ்மாக் மதுபான கடையில், பீல் கொடுக்கப்பட்ட பிறகும் கூடுதல் விலைக்கு டாஸ்மார்க் மது விற்பதாக புகார்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஊத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த 16 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பில் கொடுக்கப்பட்டும் கூடுதல் விலைக்கு, மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.