உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் 63 விமான நிலையங்களைக் கொண்ட பட்டியலில் தூத்துக்குடி விமான நிலையம் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள், ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான ஓடுபாதை கொண்ட விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறவுள்ளது. விரைவில் விரிவாக்க பணிகள் முடிந்து முழுமையாக புதிய விமான நிலைய முனையம் செயல்படும்போது இன்னும் சிறப்பான சேவைகளுடன் முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.