புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வார விழா தொடக்கம்

63பார்த்தது
புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வார விழா தொடக்கம்
தூத்துக்குடி புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வார விழா சிறுவர்-சிறுமிகள் கண்காட்சியுடன் தொடங்கியது.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் விவிலிய வாரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகளின் கண்காட்சியை ஆலய பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் சிறுவர்-சிறுமிகள் தூதர்கள் போல் கடவுளின் படைப்பு, கிறிஸ்துவின் பிறப்பு, திருமுழுக்கு யோவானிடம் இயேசு, திருமுழுக்கு பெறுதல், பத்து கன்னியர், கானாவூர் திருமணம், இயேசு நற்கருணை ஏற்படுத்துதல், கோயிலில் வியாபாரிகளை கண்டித்தல், இயேசுவின் பாடுகள், இயேசு மரித்தது, இயேசுவின் உயிர்ப்பு மற்றும் ஏராளமான தத்ரூபமாக வேடமிட்டு இருந்த சிறுவர் சிறுமிகளைப் பார்த்து பார்வையாளர்கள் மெய்சிழிர்த்து நின்றனர்.

தினமும் 20 அன்பியங்களுக்கு இடையே பல்வேறுப் போட்டியில் விவிலியத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதில் குழுப்பாடல் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, இறைவாா்த்தைப் அறிவிக்கும் போட்டி, குழு நடனப் போட்டி, விநாடி வினா போட்டிகள், குழு நாடகம் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்படும். நிகழ்ச்சி, ஏற்பாடுகளை ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில். பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி