தூத்துக்குடியில் உச்சம் தொட்ட பூண்டு விலை!

3676பார்த்தது
தூத்துக்குடியில் உச்சம் தொட்ட பூண்டு விலை!
தூத்துக்குடியில்  பூண்டு விலை அதிகரிப்பினால், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

அன்றாட சமையலில் பயன் படுத்தப்படும் விளை பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.  

தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. இப்பகுதிகளில் விளைச்சல் குறைவு காரணமாக, தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக கிலோ ரூ. 200க்கு விற்பனையான பூண்டு விலை நேற்று ரூ. 400க்கு விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்ததால், பூண்டு விலை உயா்ந்து காணப்படுகிறது. வரும் நாள்களில் பூண்டு வரத்து அதிகரிக்கும்போது, விலை குறைந்துவிடும். மேலும், விலை உயா்வு காரணமாக பூண்டு விற்பனை மந்தமாக உள்ளது என்றாா். பூண்டு விலை அதிகரிப்பினால், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி