திமுகவுடன் இன்று விசிக, ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை

51பார்த்தது
திமுகவுடன் இன்று விசிக, ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, விருப்பமுள்ள தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று விசிக, விசிக, ஐயூஎம்எல், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இதில், விசிகவுக்கு 2 தொகுதிகளும், ஐயூஎம்எல், கொமதேகவுக்கு தலா ஒரு தொகுதிகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.