தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் ஆய்வு

58பார்த்தது
தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 200 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 58, 373 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வினை 45, 440 பேர் எழுதினர்.

12, 933 பேர் பங்கேற்கவில்லை. தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தார். தொகுதி 4 தேர்வு எழுத வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி