நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 30வது படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் விக்ரம்பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் டாணாக்காரன் என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த தமிழ் இயக்கத்தில் இந்தப் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1960களில் நடப்பதாக பீரியட் படமாக கார்த்தி 30 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.