தமிழகத்தில் மீண்டும் கள்ளக் கடல் எச்சரிக்கை!

68பார்த்தது
தமிழகத்தில் மீண்டும் கள்ளக் கடல் எச்சரிக்கை!
தமிழகத்தில் மழையும், வெயிலும் மாறி, மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 3 நாட்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கடலில் ஏற்பட்ட அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கடல் பகுதியில் 2.6 முதல் 3 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று முதல் நாளை இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி