வாகனம் ஓட்டிய சிறுவன் - தந்தை மீது வழக்கு

54பார்த்தது
வாகனம் ஓட்டிய சிறுவன் - தந்தை மீது வழக்கு
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து போலீசார் சிறுவனின் தந்தையை வரவழைத்து வழக்குப்பதிவு செய்து ரூ.25,000 அபராதம் வித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான பெற்றொர் தங்கள் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you