தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் சன்னதியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் விளக்கேற்றி வழிபாடு பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் இதைத்தொடர்ந்து ஆடி மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள பைரவர் சன்னதியில் ராகு காலத்தில் மாலை நான்கு முப்பது மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இதில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, வடை மாலை அரளி உள்ளிட்ட பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு பைரவர் சந்நிதி முன்பு ஏராளமான ஆண்களும் பெண்களும் தேங்காய் மற்றும் மண் சட்டியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.