தூத்துக்குடி - Thoothukudi

தூத்துக்குடியில் தோசை மாஸ்டர் தற்கொலை

தூத்துக்குடியில் தோசை மாஸ்டர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், செக்காரகுடி சொக்கலிங்கபுரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பேச்சிமுத்து (வயது 43). இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் சுமார் 13 ஆண்டுகளாக தோசை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகர் மற்றும் பைல்ஸ் போன்ற உடல்நல பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் தூத்துக்குடி மையவாடியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


தூத்துக்குடி