தூத்துக்குடி - Thoothukudi

தூத்துக்குடி: மதுகுடிப்பதை கண்டித்ததால் வாலிபர் மீது தாக்குதல் - 3பேர் கைது

தூத்துக்குடி: மதுகுடிப்பதை கண்டித்ததால் வாலிபர் மீது தாக்குதல் - 3பேர் கைது

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு அமர்ந்து மது குடிப்பதை கண்டித்த வாலிபரை தாக்கிய சிறுவன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் உதயகுமார் (38). இவரது வீட்டின் முன்பு 3 பேர் மது குடித்துக் கொண்டிருந்தார்களாம். இதை உதயகுமார் தட்டி கேட்டுள்ளார். உடனே 3 பேரும் சேர்ந்து உதயகுமாரை சராமாரியாக கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித் (27), செல்சினி காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்கனி (28), மற்றும் 17 வயது இளம்சிறார் ஆகிய 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


தூத்துக்குடி