இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்!

64பார்த்தது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்த இருப்பதாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சைரஸ்-க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தாளமுத்து நகர் கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடிய நிலையில் அங்கே இருந்த ஒருவேனை சோதனை செய்தனர்.

அந்த வேனில் 40 பண்டல்களில் இருந்த சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் கடலோரக் பாதுகாப்பு குழும காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி