காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

54பார்த்தது
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் கர்மவீரர் கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்கள் அதன் பின் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகரத் தலைவர் ஏ. ஜே அருள்வளன், DCTU மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மீனவரணி மிக்கேல் குரூஸ், எஸ்சி பிரிவு முன்னாள் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, , ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், வழக்கறிஞர் பிரிவு, மாவட்ட தலைவர் பிரதீப் தினகரன், பிரைன்நாத் சம்சுதீன், அசனார், ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி