தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மார்ச் 06 முதல் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.