பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் சிகிச்சையில் இருக்கும் கல்பனாவுக்கு தற்போது சுயநினைவு திரும்பியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.