செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளி வாகனத்தில் வைத்து குழந்தையிடம், கிளீனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்துபட்டுள்ளார்.