குலசை தசரா திருவிழா; சூரசம்ஹாரம் தேதி அறிவிப்பு

50பார்த்தது
குலசை தசரா திருவிழா; சூரசம்ஹாரம் தேதி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுைற முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை (அக்.,2) காலை 11 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. நாளை மறுநாள் (அக்.,3) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9. 30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான 12-ஆம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். 11-ம் திருநாளான 13-ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 14-ஆம் தேதி காலையில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி