சாகுபுரம் அரிமா சங்கத்தில் மூத்த தலைவர்கள் பதவியேற்பு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் அரிமா சங்கத்துடைய 2024-25 க்கான புதிய பொறுப்பாளர்களை பதவியில் அமர்த்ததும் நிகழ்வு சாகுபுரம் டி. சி. டபிள்யூ விருந்தினர் மாளிகையில் வைத்து நடைபெற்றது. மூத்த தலைவராக பெலிக்ஸ் கிளாட்சன், செயலாளர்களாக பொன்சரவணன், ஓயிட்பீல்ட், பொருளாளராக சுரேஷ்குமார் ஆகியோரை இரண்டாம் நிலை துணை ஆளுனர் வெற்றிசெல்வன் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் 3 தையல் இயந்திரங்கள், ஒரு மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை முதலிய சேவைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மண்டல தலைவர் தினேஷ் பெர்னான்டோ, வட்டார தலைவர் நடராஜன் சுடலைமணி, டி. சி. டபிள்யூ நிறுவனத்தின் உதவித்தலைவர் சுரேஷ், அதிகாரிகள் பிரகாஷ், முத்துப்பாண்டியன், மற்றும் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர். விழாவை கேஎம் சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.