ரத்தினம் பட காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து ஹரி பார்த்தார்.

71பார்த்தது
இயக்குனர் ஹரி இயக்கி நடிகர் விஷால் நடித்து வெளியாகியுள்ள ரத்தினம் திரைப்படத்தின் முதல் பிரமோஷன் காட்சி தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இயக்குனர் ஹரி வெளியிட்டு ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்.


இயக்குனர் ஹரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரத்தினம் , இயக்குனர் ஹரி இயக்கி உள்ள 17 வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சங்க தலைவர் விஷால் நடித்துள்ளார் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது

இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் ரத்தினம் திரைப்படத்தின் பிரமோஷன் காட்சி வெளியிடப்பட்டது இதில் இயக்குனர் ஹரி கலந்து கொண்டு திரையரங்கிற்க்கு வந்திருந்த பொதுமக்களுடன் அமர்ந்திருந்து பிரமோஷனை பார்த்து ரசிகர்களுடன் தனது கருத்தை பரிமாறிக் கொண்டார்

தொடர்புடைய செய்தி