கொட்டும் மழையிலும் தவெக மாநாட்டின் பணிகள் தீவிரம்

60பார்த்தது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இருந்தபோதிலும், மாநாட்டிற்கான பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி